சினிமா செய்திகள்
தி லெஜண்ட் திரைப்படத்தின் ஓ.டி.டி. ரிலீஸ் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சினிமா செய்திகள்

'தி லெஜண்ட்' திரைப்படத்தின் ஓ.டி.டி. ரிலீஸ் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தினத்தந்தி
|
2 March 2023 11:53 PM IST

‘தி லெஜண்ட்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

சென்னை,

கடந்த ஆண்டு வெளியான 'தி லெஜண்ட்' திரைப்படத்தை லெஜண்ட் சரவணன் தயாரித்து, அதில் கதாநாயகனாக நடித்திருந்தார். பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவான இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில் உருவான இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். இந்த படத்தின் மூலம் ஊர்வசி ரவுட்டேலா கதாநாயகியாக தமிழில் அறிமுகமானார்.

இந்நிலையில் 'தி லெஜண்ட்' படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படம் நாளை (03.03.2023) அன்று ஹாட் ஸ்டார் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்